அலாதிப் பிரியம்


எதுவெல்லாம் பிடிக்கும்
என்ற வினாவில்
இடம்பெறாத உன் பெயருக்கு
எங்ஙனம் விடையளிக்க.?

எந்தவொரு கட்டாயமுமின்றி
உனக்குப் பிடித்த எதுவாகினும்
எனக்கும் பிடித்துப் போவது
இந்தக் காதல் நோயால் உண்டானது..

ஆயினும்
நீ விரும்பாத ஒன்றைக் கூறி
உன்னைச் சிணுங்கச்
செய்வதில்தான் முழுமையாகிறது
இந்த நொடிப்பொழுது..

- அலாதிப் பிரியன்

Comments