Skip to main content

Posts

Featured

குறும்(புத்)தொகை

காதல் வயப்பட்ட இரு நெஞ்சங்களுக்கு இடையே இயற்கைப் புணர்ச்சி நிகழ்கிறது. இந்த நிகழ்விற்குப் பின்னாக, தலைவன் தம்மைவிட்டு நீங்கிவிடுவானோ என்கிற தலைவியின் அச்சத்தின் வெளிப்பாட்டைக் கண்டு பாடிய சங்க இலக்கியப் பாடல். "யாயும் ஞாயும் யாரா கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே." - செம்புலப் பெயல்நீரார் (குறுந்தொகை: 40). என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் எவ்வழியில் உறவினர்? என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எந்தமுறையில் உறவினர்? நானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு அறிந்தோம்? காதல் ஒன்றே நம்மைச் சேர்த்தது. செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையைப் பெறுவதுபோல், அன்புடைய நம் நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டன. எந்தச் சூழ்நிலையிலும் நாம் ஒருவரையொருவர் விட்டுப் பிரியமாட்டோம். எனவே, என் தலைவியே நீ அஞ்சாதிரு. நம் காதல் கரைசேரும்.. நம்மைக் காதல் கரைசேர்க்கும்..

Latest Posts

இராணுவத் தகப்பன்மார்களும் இந்தியத் தலித்துகளும்

பேபி காம்ப்ளி

உள்ளுறை

ஞானம்

ஹைக்கூ_வா..?

முகமூடி மனிதர்கள்

கோணல்

இரு..

மக்கள் கவிஞனுக்கு வாழ்த்து மடல்…

வருக புத்தாண்டே - 2024

பிராண சங்கடம்