மாட்டெருமை
![]() |
Pic Source: The British Museum Website |
அதைத் தொங்கவிட்டுத் தோலுரிப்பவன்
உன் தெய்வத்திற்குச் சமானமில்லையா.?
மாடு உனக்குப் புனிதமாகுகையில்
அதன் கறி தின்னும் பழம்பறையன்
அதைவிடப் புனிதமிக்கவனில்லையா.?
எருமைக்கு ஏளனம்..
பசுவிற்கோ பாசப் போராட்டம்..
அடிமாட்டின் மூளையில்
அரைவாசியும் அற்ற
எனதருமை கோமியக் குடிக்கியே..
கோமாதாக்களின் மேல் நெடுங்காலமாய்க்
குத்தவைத்து அமர்ந்திருக்கும்
குந்தி தேவர் / தேவிகளைச்
சற்று கீழிறங்கச் சொல்..
அவசரமாய் மூத்திரம் வருகிறதாம்
அடியிலிருக்கும் மாட்டிற்கு...
- அலாதிப் பிரியன்
Comments
Post a Comment