வருக புத்தாண்டே..இனி
எம்மைப் புதிய உயிராக்கி
இடர்
தீர்ந்தொரு உலகம் புகுத்தி
இயற்கை
நெறிமிகு இன்ப வாழ்க்கை
வாய்த்திடச் செய்வாய்..அன்பும்
அறனுங் கொண்டு
ஆதித்
தமிழர் மாண்பொடு
சாதி / மத
மாயை மீட்டு
மானுடம் தழைத்தோங்க
வாழ்த்திட்டுச் செல்வாய்..
வருக.! புத்தாண்டே வருக.!
- அலாதிப் பிரியன்
Comments
Post a Comment