கோணல்

Art By: Ravi Palette

வழக்கு:
விவசாயி கோமணம்
காணவில்லை,
வழக்குத் தொடுத்தார்..
சட்டம் அங்கே நிர்வாணமாய்..

கலப்புத் திருமணம்:
கழுதை weds மனிதன்
மணமகன் சம்பவ இடத்திலேயே பலி..
கழுதை கவலைக்கிடம்..

தலைப்புச் செய்தி:
நடிகையின் பாவாடை
4 கோடிக்கு ஏலம்..
ஊடக தர்மம்..

- அலாதிப் பிரியன்

Comments

Popular Posts