முகமூடி மனிதர்கள்
● நேர்முகத் தேர்வு
நடத்துகிறார்கள்..
முகமூடி மனிதர்கள்..
● கண்டுபிடித்து
விடுகிறார்கள்..
உண்மைகள் தான்
இருப்பதில்லை..
● மனிதாபிமானம்
பொருத்துக
சன்மானம்..
● பாரதி...
நீ கண்ட புதுமைப் பெண்கள் எங்கே?
இடிமுழக்கப் பேச்சாளர்
விடிய விடியப் பேச்சு..
மனைவி அடுப்படியில்..
தலைப்பு - பெண்ணடிமை ஒழிக..
● வாயில் எலி..
விவசாயி பலி..
அதோ பிறந்துவிட்டது
டிஜிட்டல் இந்தியா..
● சுதந்திர தினமாம்
யாருக்கு?
சட்டென வாயடைத்தான்..
நீ ஒரு தேசத்துரோகி..
- அலாதிப் பிரியன்
Comments
Post a Comment