ஹைக்கூ_வா..?

Pic Source: iStock Photos

நீ 
அவிழ்த்து எரிந்த ரிப்பன்கள்
வளைந்தது வில்லாக..
- வானவில்

வானத்தைக் கிழித்த உன்னை
வில்லாகத் தொடுத்தது யார்?
- வானவில்

இரவு பகல் சுற்றியும்
கிறங்கவில்லை நான்..
- காற்றாடி

தண்ணியிலிருந்தும் நீந்துகிறேன்
கரைசேர முடியவில்லை..
- குடிகாரன்

இனிப்பைக் கொடுத்தேன்
இறப்பைத் தந்தாய்..
- கரும்பு

நாள்தோறும் பூத்துக் குலுங்கும்
மணம் வீசா காகிதப் பூக்கள்..
- குழந்தைத் தொழிலாளர்கள்

- அலாதிப் பிரியன்

Comments

Popular Posts