இரு..
பேச்சாளர் vs பார்வையாளர்:
அவருக்குப்புரிந்துவிட்டது
நமக்குப்
புரியவில்லையென்பது..
முரண்:
முழுநேரக்கடையடைப்புப் போராட்டம்..
நாளைய
'பந்த்' அறிவிப்பால்..
ஆதா(ர்)ரம்:
ஆதாரமற்றுப் போனபிணங்கள் நாங்கள்..
ஆதார் அட்டை
இல்லாததால்..
சட்டச் சிக்கல்:
பசிக்கு ரொட்டி திருடிய
இருவருக்கு இ.பி.கோ..
சட்டம் தன் கடமையைச் செய்யும்..
பாவக் கணக்கு:
உயிர்களைக் கொல்வது பாவம்
தடையை மீறினான்..
இரவெல்லாம் கொசுக்கடி..
- அலாதிப் பிரியன்
Comments
Post a Comment