பேபி காம்ப்ளி
படம்: பேபி தாய் காம்ப்ளி தலித் வரலாறு குறித்த வாசிப்புகளில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் நூலாக, 'பேபி காம்ப்ளி'யை வரையறுக்கலாம். இது மகாராஷ்டிரப் பகுதி மஹர் சமூக மக்களின் வாழ்க்கையைப் பற்றிய வரலாற்றைத் தெளிவுபடுத்தும் நூலாகும். காம்ப்ளியின் சுயசரிதையாக விரியும் இந்நூல் பாபாசாகேப் அம்பேத்கரின் வருகைக்கு முன் மஹர் சமுதாயம் எவ்வாறு இருந்தது என்றவாறு தன் நினைவாற்றலை மீட்டெடுக்கிறது. மஹர்களின் உள் உலகம், இந்திய சமூகத்தின் சாதிய அடக்குமுறை, ஆணாதிக்கம் பற்றிய பல்வேறு தரவுகளை விவரிக்கிறது. அதேவேளை நூலின் எழுத்து சுயபரிதாபம் தேடும் வகையில் அமையவில்லை. மஹர் மக்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வழிபாடுகள், மூடநம்பிக்கைகள், மகிழ்ச்சிகள் மற்றும் துக்கங்கள் என வாழ்வின் பல்வேறு நகர்வுகளையும் நூலாசிரியர் மிகத்தெளிவாக உயிர்ப்பிக்கிறார். " பேபி காம்ப்ளி - தனிப்பட்ட கதைகளின் வரம்புகளை உடைத்த ஒரு வரலாற்று மற்றும் அரசியல் பதிவாக, ஒரு பெண்ணிய விமர்சனமாக, பிராமண இந்து மதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சபிக்கப்பட்ட மக்களின் நினைவுக் குறிப்பாக விளங்குகிறது". _______________________________...